Home /News /entertainment /

மளிகை சாமான் வாங்கினால் வலிமை டிக்கெட் ஃப்ரீ! ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆஃபர்!

மளிகை சாமான் வாங்கினால் வலிமை டிக்கெட் ஃப்ரீ! ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆஃபர்!

அஜித்

அஜித்

ரசிகர்களை பெரும் எதிர்ப்பார்ப்புக்குள்ளாக்கிய இந்தப் படம் நாளை பிரமாண்டமாக வெளியாகிறது.

    மளிகைப் பொருட்கள் வாங்கினால் வலிமை பட டிக்கெட் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ’நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அவரின் 60-வது படமாக உருவாகியுள்ள இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    வலிமை படத்தைப் பற்றி அஜித்தின் அண்ணன் அனில் குமார் என்ன சொன்னார் தெரியுமா?

    ரசிகர்களை பெரும் எதிர்ப்பார்ப்புக்குள்ளாக்கிய இந்தப் படம் நாளை பிரமாண்டமாக வெளியாகிறது. முதல் நாள் காட்சிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து ஹவுஸ் ஃபுல்லாகியிருக்கின்றன. இதனால் வலிமை படத்தின் முதல் நாள் வசூல் பெரிதளவில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நம்பர் 1 நடிகையாகும் ஆசை இல்லை - சமந்தா ஓபன் டாக்!

    இந்நிலையில் வேலூரில் உள்ள தென்னிந்திய பன்மாநில கூட்டுறவு அங்காடி மையத்தில் 2999-க்கு மேல் மளிகை பொருட்கள் வாங்கினால் வலிமை டிக்கெட் இலவசம் என அறிவித்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Ajith, Valimai

    அடுத்த செய்தி