வலிமை படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றிய 2 நிறுவனங்கள்

வலிமை படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றிய 2 நிறுவனங்கள்

அஜித் குமார்

அஜித்தின் வலிமை பட தமிழக உரிமையை இரண்டு நிறுவனங்கள் கைப்பற்றியிருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் விளம்பர பணிகள் அஜித்தின் 50-வது பிறந்தநாளையொட்டி மே 1-ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவித்திருந்த போனி கபூர், தமிழக திரையரங்கு உரிமையை ரோமியோ பிக்சர்ஸின் ராகுலுக்கும் கோபுரம் சினிமாஸூக்கும் அளிக்கப்பட்டுள்ளது என்று ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்திருக்கிறார். போனி கபூரின் இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.



வலிமை படத்தின் அஜித் உடன் கார்த்திகேயா, ஹியூமா குரேஷி, சுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் நிலையில் படக்குழு நடிகர்களின் பட்டியலை வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை.

முன்னதாக ‘வலிமை’ படத்தில் அஜித்தின் ஓபனிங் பாடல் துள்ளலிசை பாடலாக அமைத்திருப்பதாகவும், விக்னேஷ் சிவன் எழுதியிருக்கும் அந்தப் பாடல் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றும் ஒடிஷாவிலிருந்து திருவிழா ட்ரம்ஸ் கலைஞர்களை அழைத்து வந்து முதல் பாடலை பதிவு செய்ததாக இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தெரிவித்திருந்தார்.
Published by:Sheik Hanifah
First published: