அஜித்தின் வலிமை படப்பிடிப்பு நிறைவு!

அஜித்

படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் செகண்ட் சிங்கிள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்

 • Share this:
  அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

  சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என வித்தியாசமான கதைக்களத்தில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர் ஹெச்.வினோத். அடுத்து அஜித்திடம் கதை சொல்லி, அவரது சம்மதத்தையும் பெற்றார். அந்த நேரத்தில் போனி கபூருக்கு படம் பண்ணித்தர வேண்டியிருந்ததால், இந்தி பிங்கின் தமிழ் ரீமேக்கில் நடிக்க அஜித் ஒப்புக் கொண்டார்.

  இயக்குநருக்கு ஏன் அலைய வேண்டும் என்று பிங்க் தமிழ் ரீமேக்கை இயக்கும் பொறுப்பை வினோத்திடம் அளித்தார் போனி கபூர். நேர்கொண்ட பார்வையாக அப்படம் வெளியானது. இதையடுத்து மீண்டும் போனி கபூர், அஜித், ஹெச்.வினோத் கூட்டணியில் வலிமை படம் உருவாகியுள்ளது.

  வலிமை படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. ஏற்கனவே ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

  Valimai Ajith Latest Stills

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் செகண்ட் சிங்கிள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: