அஜித்தின் ‘வலிமை’ ஷூட்டிங் பற்றிய அசத்தல் அப்டேட்..

‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தின் ‘வலிமை’ ஷூட்டிங் பற்றிய அசத்தல் அப்டேட்..
அஜித்
  • News18 Tamil
  • Last Updated: September 14, 2020, 11:48 AM IST
  • Share this:
போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

யுவன் சங்கர்ராஜா இசையமைப்பாளராகவும், நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். ஹைதராபாத் சென்னை, உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் 75 பேருடன் திரைப்பட படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில் பெரிய நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் அக்டோபர் மாதம் முதல் ‘வலிமை’ படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், படத்தில் பணியாற்றும் அனைத்து நடிகர்களுக்கும் இம்முடிவு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மேலும் வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிட்ட காட்சிகளின் படப்பிடிப்பை இந்தியாவிலேயே நடத்தி முடிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. முன்னதாக கொரோனா பிரச்னை முழுவதுமாக முடிந்து இயல்புநிலை திரும்பிய பின்னரே ‘வலிமை’ படத்தைத் தொடங்க தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு அஜித் அறிவுறுத்தியிருந்ததாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது அக்டோபர் மாதத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
First published: September 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading