Home /News /entertainment /

'நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ’ - வலிமை செகண்ட் சிங்கிள்!

'நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ’ - வலிமை செகண்ட் சிங்கிள்!

வலிமை

வலிமை

வலிமை படத்தின் செகண்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

    'நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. முன்னதாக ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதோடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. செப்டம்பர் இறுதியில் படத்தின் க்ளிம்ப்ஸும் வெளியானது.



    இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் செகண்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் எழுதியுள்ள பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். ‘நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ’ என அஜித் பேசுவதைத் தொடர்ந்து, பாடலும் அப்படியே ஆரம்பிக்கிறது. இதைக்கேட்ட ரசிகர்கள் அந்த ப்ரோமோவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

    Ajith Valimai second single mother song promo released, Valimai glimpse, Valimai mother song, valimai song release, valimai movie, valimai second single, valimai update, thala ajith, ajith fans, ajith fan, அஜித், வலிமை அப்டேட், அஜித் ரசிகர்கள், valimai first single, ajith valimai first single, valimai first single song, valimai first single yuvan, valimai first single vera mathiri, வலிமை ஃபர்ஸ்ட் சிங்கிள், வலிமை அஜித், வலிமை முதல் சிங்கிள், வலிமை முன்னோட்டம், வலிமை செகண்ட் சிங்கிள், வலிமை மதர் சாங்
    வலிமை


    மேலும் படிக்க - சிபிக்கும் அபிஷேக்கிற்கும் இடையே வெடித்த சண்டை

    தொடர்ந்து முழு பாடல் வரும் 5-ம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Ajith, Valimai

    அடுத்த செய்தி