Home /News /entertainment /

Valimai Review: முதல் பாதி வெறித்தனம்! வலிமை படம் குறித்து ரசிகர்கள் கருத்து

Valimai Review: முதல் பாதி வெறித்தனம்! வலிமை படம் குறித்து ரசிகர்கள் கருத்து

அஜித்

அஜித்

ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வலிமை படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

    ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாக்கியிருந்த அஜித்தின் வலிமை திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. படத்தைப் பற்றி இணையத்தில் ரசிகர்கள் தெரிவித்த கருத்துகளை இங்கே பதிவிடுகிறோம்.

    'நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். அவரின் 60-வது படமாக உருவாகியுள்ள இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள், ட்விட்டரில் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அவற்றை இங்கே பதிவிடுகிறோம்.

    வலிமை திரைப்படம் இவ்ளோ நேரம் ஓடுமா? மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்!



    நல்ல திரைக்கதை. ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும், பல பைக் காட்சிகள் உண்மையில் பல இடங்களில் வேலை செய்யவில்லை. இது தீரன் ஹெச்.வினோத் அல்ல. அஜித் ரசிகர்கள் இந்தப் படத்தை அவருக்காக ரசிக்கலாம். BGM கூட ஒரு குறை தான். ஒரு முறை பார்க்கலாம்.



    சிறந்த ஹீரோ அறிமுக காட்சிகளில் ஒன்று. கிங் ஏ.கே மற்றும் அவரது ஸ்கிரீன் பிரெசன்ஸ்! ஹெச்.வினோத்திடம் இருந்து மரண மாஸ் எலிவேஷன்.



    முதல் பாதி வெறித்தனம். இடைவெளைக்கு முந்தைய காட்சி கொல மாஸ்.











    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Ajith, Valimai

    அடுத்த செய்தி