மாத கணக்காக அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த வலிமை திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. இதையடுத்து கொண்டாட்ட மனநிலையில் லயித்துப் போயிருக்கிறார்கள் ரசிகர்கள். 2 ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பில் இருந்த வலிமை படம் கடந்து வந்த பாதை குறித்து இங்கு பார்ப்போம்.
2019-ம் ஆண்டு அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வெளியானது. இந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்காக அப்படம் வெளியானது. அதன் பிறகு நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய H.வினோத் மீண்டும் அஜித் மற்றும் போனி கபூருடன் இணையும் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்திற்கு வலிமை எனப் பெயரிடப்பட்டது. பெயர் தவிர வேறெந்த அப்டேட்டும் வெளியாகாததால் சோகத்தில் ஆழ்ந்தனர் ரசிகர்கள். அதனால் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு சமூக வலைதளங்களில் அலப்பரையைக் கூட்டினர்.
குறிப்பாக 2021 தமிழக சட்டமன்ற தேர்தலின் போது அரசியல் தலைவர்கள் கலந்துக் கொண்ட பிரச்சாரங்களில் வலிமை அப்டேட் கேட்டு ட்ரெண்டாக்கினர் அஜித் ரசிகர்கள். அப்போது தன்னை ஜெயிக்க வைத்தால் வலிமை அப்டேட் வாங்கி தரப்படும் என வாக்குறுதி அளித்தார் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன்.
வலிமை முதல் காட்சி தாமதம் - நாட்டு வெடி வெடிக்க முயற்சி செய்த ரசிகர்கள்
இது ஒருபுறமிருக்க கோவிட் தொற்று பிரச்னையால் வலிமை படப்பிடிப்பு தள்ளி போனது. பின்னர் 2021 செப்டம்பரில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிய போது, ஜனவரி 13-ம் தேதி பொங்கலை முன்னிட்டு வலிமை திரைப்படம் மூன்று மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால், படம் பொங்கலுக்கு வெளியாகாமல் தள்ளிப்போனது.
Valimai Review: அஜித்தின் வலிமை திரைப்படம் எப்படி இருக்கிறது?
இப்படி பல தடைகளைக் கடந்து வந்த வலிமை திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.