Home /News /entertainment /

இந்தியில் 1000 திரைகளில் வெளியாகும் அஜித்தின் வலிமை!

இந்தியில் 1000 திரைகளில் வெளியாகும் அஜித்தின் வலிமை!

அஜித்

அஜித்

'வலிமை' திரைப்படம் பல வெளிநாடுகளில் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

    நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் வலிமை திரைப்படம், இந்தியில் 1000 திரைகளில் வெளியாகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நேர்க்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித், வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்க, கார்த்திகேயா, ஹுமா குரேஷி, யோகி பாபு, புகழ், ராஜ் ஐயப்பா, சுமித்ரா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வலிமை படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர், போனி கபூர் தயாரித்துள்ளார்.

    அஜித்தின் நாங்க வேற மாரி சாதனையை முறியடித்த விஜய்யின் அரபிக் குத்து!

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அதிக ஆக்‌ஷன் காட்சிகளை கொண்ட 'வலிமை' படத்தில், அஜித் பல ஆபத்தான ஸ்டண்ட் மற்றும் ரேஸ் காட்சிகளை தானே செய்து ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளார்.

    Arabic Kuthu: யூ-ட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடம், 20 மில்லியன் நிகழ்நேர பார்வைகள்... கலக்கும் விஜய்யின் அரபிக் குத்து!

    'வலிமை' திரைப்படம் பல வெளிநாடுகளில் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பிப்ரவரி 24-ம் தேதி, வெளியாகும் இப்படம் அஜித்தின் மிகப்பெரிய வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் வலிமை படம் இந்தியில் 1000 திரைகளில் வெளியாவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Ajith, Valimai

    அடுத்த செய்தி