ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வலிமை படத்தைப் பார்த்த பெற்றோர்... மனம் நெகிழ்ந்த அஜித்!

வலிமை படத்தைப் பார்த்த பெற்றோர்... மனம் நெகிழ்ந்த அஜித்!

அஜித்

அஜித்

அஜித் சார் என்னிடம், ‘இந்தப் படத்தில் நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன், என்றார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நடிகர் அஜித்தின் வலிமை இந்த வாரம் வெளியாகிறது. நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இப்படம் இறுதியாக பிப்ரவரி 24-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

போனி கபூர் தயாரித்திருக்கும் இப்படத்தில் அஜித் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக, வலிமை படத்தைப் பற்றி அஜித் சொன்னதையும், தனது வேலையை நினைத்து பெருமைப்படுவதாகக் கூறியதையும் முன்னணி ஊடகத்திடம் இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார்.

"அஜித் சார் என்னிடம், ‘இந்தப் படத்தில் நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். வலிமை படத்தில் நடித்த பிறகு, நான் ஒரு பெருமைக்குரிய மகனாக, என் அம்மா, அப்பா மற்றும் என் குடும்பத்தாருக்கு இந்தப் படத்தைத் திரையிட்டுக் காட்டப் போகிறேன் என்றார். அவர்களுக்கு திரையிட்டு காட்டி, அதற்கு அவர்களின் ரியாக்‌ஷனை அடிப்படையாக வைத்து தான் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்” என்றார் வினோத்.

ஆமாம் நான் காதலிக்கிறேன்... மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

வலிமை மற்றொரு அதிரடி படம் அல்ல என்றும் இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்தார். இது ஒரு ‘சமூகப் பிரச்சினைகளையும் பேசும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இதில் வரும் குடும்பப் பிரச்சினைகள் குடும்பத்திற்குள் நடக்கும் சம்பவங்களைப் பற்றியதல்ல. ஒரு குடும்பம் சமூகத்திற்குள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றியது. ஆகையால் அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இது’ என்றார்.

மிலிட்டரி ஹோட்டலில் தனுஷ்... உடனிருக்கும் இளம்பெண் யார்?

அஜித் நாயகனாக நடிக்கும் வலிமை படத்தில் கார்த்திகேயா கும்மகொண்டா வில்லனாக நடிக்கிறார். ஹுமா குரேஷி ஹீரோயினாக நடிக்கிறார். படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Ajith