வலிமை படத்தின் முதல் காட்சி தாமதமானதால், ரசிகர்கள் திரையரங்கில் நாட்டு வெடி வெடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
'நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். அவரின் 60-வது படமாக உருவாகியுள்ள இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வலிமை திரைப்படம் இவ்ளோ நேரம் ஓடுமா? மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்!
ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பல திரையரங்குகளில் ரசிகர்களுக்காக அதிகாலை 4 மணிக்கே வலிமை திரைப்படம் திரையிடப்பட்டது. ஆனால் நாமக்கல் கே.எஸ் திரையங்கில் 'வலிமை' படத்தின் முதல் காட்சி திரையிட தாமதமானது. இதனால் கோபமடைந்த ரசிகர்கள் தியேட்டர் கதவில் நாட்டு வெடியை கட்டி வெடிக்க முயற்சித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
முதல் பாதி வெறித்தனம்! வலிமை படம் குறித்து ரசிகர்கள் கருத்து
வெடியை அகற்ற அங்கு வந்த காவல்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. கதவு திறக்கப்படாததால் சுவர் ஏறி குதித்து ரசிகர்கள் உள்ளே சென்றனர். இருப்பினும் படத்தை திரையிடும் உரிமை இறுதி நேரத்தில் கிடைக்காததால், முதல் காட்சிக்கு தாமதமானதாகவும், அதனால் ரசிகர்களை உள்ளே விட முடியவில்லை என்றும் தியேட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.