Valimai : அஜித்தின் ‘வலிமை’ ரிலீஸ் தேதி 5 நாட்களில் தெரிந்துவிடும்?

வலிமை

வெளிநாட்டு படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியதும், வலிமை ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • Share this:
    நடிகர் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தில் ரிலீஸ் தேதி 5 நாட்களில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    ’நேர்க்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்து விட்டபோதிலும் இன்னும் வெளிநாட்டில் படமாக்க வேண்டிய காட்சிகள் மட்டும் பாக்கி உள்ளது. இந்நிலையில் ‘வலிமை’ படக்குழுவினர் அடுத்த வாரம் வெளிநாட்டு படப்பிடிப்பிற்காக செல்ல உள்ளனர் என்றும் அங்கு ஐந்து நாட்கள் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வலம் வருகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வெளிநாட்டு படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியதும், வலிமை ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வெளிநாட்டில் 5 நாட்கள் படப்பிடிப்பு முடிந்ததும் வலிமை ரிலீஸ் தேதி தெரிய வரும் என்பதில் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    ஏற்கனவே ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில், விரைவில் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் வெளிவரும் என்ற தகவலால் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: