Home /News /entertainment /

வலிமை படத்தை புகழ்ந்த அருண் விஜய்... வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

வலிமை படத்தை புகழ்ந்த அருண் விஜய்... வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

அஜித்

அஜித்

அஜித்தின் வலிமை படத்தைப் பார்த்த பிரபலங்கள் தங்கள் கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.

    அஜித்தின் வலிமை திரைப்படதிற்கு பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளையும், படத்தைப் பார்த்தவர்கள் தங்கள் கருத்துகளையும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்கள்.

    'நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். அவரின் 60-வது படமாக உருவாகியுள்ள இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. முதல் நாள் படத்தைப் பார்த்த ரசிகர்கள், ட்விட்டரில் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அதே வேளையில் பிரபலங்களும் அஜித்தின் வலிமை திரைப்படத்திற்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். அதோடு படத்தைப் பார்த்த பிரபலங்கள் தங்கள் கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.

    அஜித்தின் வலிமை திரைப்படம் எப்படி இருக்கிறது?



    ’வழியெங்கும் அஜித் சாரின் இருப்பு! டாப் நாட்ச் ஆக்ஷன் காட்சிகள், குறிப்பாக பைக் ஸ்டண்ட்... ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய விருந்தாகும்... குழுவிற்கு பாராட்டுக்கள்' என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகர் அருண் விஜய்.



    காலை 4 மணி காட்சி குறித்து சண்டை இயக்குநர் திலீப் சுப்பராயன்.

    வலிமை முதல் காட்சி தாமதம் - நாட்டு வெடி வெடிக்க முயற்சி செய்த ரசிகர்கள்



    வலிமை படத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்த நடிகர் விக்ரம் பிரபு.



    நடிகர் கபீர் துஹான் சிங் வலிமை படத்திற்கு வாழ்த்து.



    நடிகை வரலட்சுமி சரத்குமார் வாழ்த்து.



    அஜித்துக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த பார்வதி நாயர், படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.



    4 மணி காட்சியைப் பார்த்த மகிழ்ச்சியில் நடிகர் மகேந்திரன்



    நடிகர் கெளதம் கார்த்திக் வலிமை படத்திற்கு வாழ்த்து.



    நடிகை யாஷிகா ஆனந்த் வலிமை படத்திற்கு டிக்கெட் வாங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.



    நடிகர் சாந்தனு பாக்யராஜ் ட்வீட்



    வலிமை படத்திற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.



    இயக்குநர் ஹெச்.வினோத், நடிகர் அஜித் மற்றும் குழுவினருக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Ajith, Valimai

    அடுத்த செய்தி