ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

படம் வெளிவரும் முன்பே லாபம் பார்த்த வலிமை தயாரிப்பாளர்!

படம் வெளிவரும் முன்பே லாபம் பார்த்த வலிமை தயாரிப்பாளர்!

வலிமை

வலிமை

தமிழில் விஜய், ரஜினி, அஜித் படங்களுக்கு சேட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை மிக அதிகம் தரப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அஜித் நடித்திருக்கும் வலிமை 2022 ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகிறது. வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படம் திரைக்கு வெளிவரும் முன்பே தயாரிப்பாளருக்கு 11 கோடிகள் லாபம் சம்பாதித்து தந்திருப்பதாக ட்ரேட் அனலிஸ்டுகள் கூறியுள்ளனர்.

முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்கு வசூலை மட்டும் நம்பி இல்லை. சேட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை, ஓடிடி உரிமை என பல வழிகளில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பணம் கொட்டும். உதாரணமாக அக்ஷய் குமார் நடித்த சூர்யவன்ஷி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 3-வது வாரத்தில் ஓடிடிக்கு வந்தது. இதற்காக ஓடிடி தளம் கொடுத்தது 100 கோடிகள்.

தமிழில் விஜய், ரஜினி, அஜித் படங்களுக்கு சேட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை மிக அதிகம் தரப்படுகிறது. வலிமையை பொறுத்தவரை அதன் வெளிநாட்டு உரிமை, தமிழக திரையரங்கு உரிமை மற்றும் பிற உரிமைகள் வழியாக இதுவரை 160 கோடிகள் கிடைத்திருப்பதாகவும், 11 கோடிகள் இப்போதே தயாரிப்பாளர் போனி கபூருக்கு லாபம் எனவும் ட்ரேட் அனலிஸ்டுகள் தெரிவித்துள்ளனர். இன்னும் சில உரிமைகள் விற்கப்பட உள்ளன.

வலிமை படத்தின் சண்டைக் காட்சிகள் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தை தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து ரீமேக் செய்ய போனி கபூர் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 2021 பொங்கலுக்கு மாஸ்டர் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. 2022-ல் அஜித்தின் வலிமை அதேயளவு வெற்றியை பெறப் போகிறது என்பது இந்த லாபக் கணக்குகளிலிருந்து தெரிகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Ajith, Valimai