Valimai: சாதனை படைத்த அஜித்தின் ‘வலிமை’ மோஷன் போஸ்டர்!

வலிமை

நேற்று மாலை ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது.

  • Share this:
    அஜித்தின் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகம் லைக் செய்யப்பட்ட போஸ்டர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறது.

    'நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    நேற்று மாலை ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. வெகுநாள் காத்திருந்த ரசிகர்களுக்கு இது பெரும் விருந்தாக இருந்தது. சமூக வலைதளங்களில் வலிமை ஃபர்ஸ்ட் லுக்கை கொண்டாடி தீர்த்து விட்டனர் அஜித் ரசிகர்கள்.



    இந்நிலையில் இந்தியளவில் அதிக லைக்குகளை பெற்ற மோஷன் போஸ்டராக வலிமை இடம்பெற்றுள்ளது. யூ-ட்யூபில் அந்த போஸ்டருக்கு இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன. இதற்கு முன்பு விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் அதிக லைக்குகள் பெற்ற மோஷன் போஸ்டராக இருந்த நிலையில், தற்போது வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் அந்த சாதனையை முறியடித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: