Home /News /entertainment /

Valimai: அஜித்தின் வலிமை மேக்கிங் வீடியோ வெளியீடு

Valimai: அஜித்தின் வலிமை மேக்கிங் வீடியோ வெளியீடு

வலிமை மேக்கிங் வீடியோ

வலிமை மேக்கிங் வீடியோ

தற்போது வலிமை திரைப்படத்தின் உருவாக்க காணொளியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் உருவாக்க காணொளியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    ’நேர்க்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, காத்திகேயா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.

    இந்நிலையில் தற்போது வலிமை திரைப்படத்தின் உருவாக்க காணொளியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படம் துவங்கிய நாள் முதல் கொரோனா நோய் தொற்று காரணமாக படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் ஆர்பரித்தது, பின்னர் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது என அனைத்து காலகட்டத்தையும் இந்த வீடியோவில் படக்குழுவினர் பதிவு செய்துள்ளனர்.



    மேலும் படத்திற்கான காட்சி ஒன்றில் அஜித் தவறி விழும் வீடியோவும் இதில் இடம் பெற்றுள்ளது. கீழே விழும் அஜித் எழுந்தவுடன் மீண்டும் வீலிங் செய்த அந்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Ajith, Valimai

    அடுத்த செய்தி