வலிமை படம் நஷ்டம் என்று பத்திரிகையாளர்கள் சிலர் கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அஜித் ரசிகர்கள் அவர்களை கேவலமான முறையில் விமர்சனம் செய்தனர்.
இந்த சர்ச்சை உச்சமடைந்த போது, வலிமையின் தயாரிப்பாளர் போனி கபூர் படம் 200 கோடிகள் வசூலித்ததாக தெரிவித்தார். எனினும், வலிமை திருச்சி போன்ற இடங்களில் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை தந்ததாக பேசப்பட்டது.
Akshara Haasan: பெண்களும் மனுஷங்க தான்... காண்டம் வாங்கினா என்ன தப்பு? - அக்ஷரா ஹாசன்
இந்நிலையில், தயாரிப்பாளர் கே.ராஜனிடம் வலிமை வசூல் பற்றி கேட்கப்பட்டது. கே.ராஜன் விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக இருந்தவர். இப்போது செங்கல்பட்டு கமிட்டி உறுப்பினராக இருக்கிறார். வலிமை வசூல் குறித்து பேசியிருக்கும் அவர், சென்னை, செங்கல்பட்டில் வலிமையை வாங்கியவர்களுக்கு 10 சதவீதம் நஷ்டம், செங்கல்பட்டு தாண்டி மற்ற ஏரியா எல்லாம் 20 சதவீதம் நஷ்டம் என அவர் கூறியுள்ளார்.
மகளின் திருமண வரவேற்பு... பிரபலங்களை அழைக்கும் இயக்குநர் ஷங்கர்!
இது படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களின் கணக்கு. திருப்பூர் சுப்பிரமணியம் மாதிரியான திரையரங்கு உரிமையாளர்கள் பலருக்கு படம் லாபத்தை தந்திருக்கிறது. ஆனால், ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் விநியோகஸ்தர்கள் 10 முதல் 20 சதவீத இழப்பை வலிமை ஏற்படுத்தியுள்ளது என்பது கே.ராஜனின் கருத்து.
வலிமை வெற்றியா, தோல்வியா என்ற சர்ச்சை ஓய்ந்திருந்த வேளையில் கே.ராஜன் போன்ற ஒரு மூத்த தயாரிப்பாளரே படம் நஷ்டம் என வெளிப்படையாக கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.