Home /News /entertainment /

அஜித் தான் நம்பர் ஒன் - ‘வலிமை’யாக தெறிக்க விட்ட ரசிகர்கள்!

அஜித் தான் நம்பர் ஒன் - ‘வலிமை’யாக தெறிக்க விட்ட ரசிகர்கள்!

அஜித்

அஜித்

'நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித்தின் அடுத்தப் படமாக ‘வலிமை’ படம் உருவாகி வருகிறது.

    2021-ம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ் டேக்கில் அஜித்தின் வலிமை முதலிடம் பிடித்துள்ளது.

    முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டு ஹேஷ்டேக் போடுவது சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்று. அதிலும் முக்கியமாக ட்விட்டரில் போடப்படும் ஹேஷ்டேக்குகள் உலகளவில் கவனம் பெறும். அந்த வகையில் 2021-ம் ஆண்டின் முதல் பாதியில் இந்திய அளவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்கில் அஜித்தின் ’வலிமை’ முதலிடம் பெற்றுள்ளது.

    இந்தப் பட்டியலில் விஜய்யின் ‘மாஸ்டர்’ இரண்டாமிடத்திலும், மூன்றாமிடத்தில் ‘சர்காரு வாரி பாட்டா’, நான்காமிடத்தில் ‘அஜித் குமார்’, ஐந்தாமிடத்தில் ’தளபதி 65’ ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    'நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித்தின் அடுத்தப் படமாக ‘வலிமை’ படம் உருவாகி வருகிறது. அவரின் 60-வது படமான இதையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    நீண்ட நாட்களாக வலிமை அப்டேட் கேட்டு சமூக வலைதளங்களில், அந்தப் படத்தை ட்ரெண்ட் செய்து வந்தனர் ரசிகர்கள். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அஜித் ரசிகர்கள், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்களிடம் அப்டேட் கேட்டனர். பாஜக சார்பில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன், தான் ஜெயித்தால் வலிமை அப்டேட்டை வாங்கி தருவதாகவும் வாக்குக் கொடுத்தார்.

    இதற்கிடையே வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும், முதல் சிங்கிளும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Ajith

    அடுத்த செய்தி