Home /News /entertainment /

முதல்முறையாக சவூதி அரேபியாவில் வலிமை ரசிகர் மன்ற காட்சி!

முதல்முறையாக சவூதி அரேபியாவில் வலிமை ரசிகர் மன்ற காட்சி!

வலிமை

வலிமை

சவூதியில் 24 ஆம் தேதி அதிகாலை 1்30 மணிக்கு அஜித் ரசிகர்களுக்கு  சிறப்புக் காட்சி திரையிட ஏற்பாடாகியுள்ளது.

சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் ஒரு படம் வெளியாவது அத்தனை எளிதல்ல, படத்தின் கதை, அதில் காட்டப்படும் காட்சிகள், அதில் வரும் கதாபாத்திரங்கள் என அனைத்தும் அவர்களின் கொள்கைக்கு விரோதமாக இருக்கக் கூடாது என்பது முதல் விதி.

தீவிரவாத பின்னணியில் எடுக்கப்படும் திரைப்படங்கள் என்றால், அரபு நாடுகளுக்குள் நுழைவது என்பது முதல் நாள் அஜித் பட டிக்கெட் கிடைப்பதை விடவும் சிரமமானது. இப்படி ஒரு பின்னணியில் தமிழ் திரைப்படம் ஒன்றுக்கு நள்ளிரவு ரசிகர் மன்ற காட்சி, சவுதி அரேபியாவில் நடத்தப்படுகிறது என்றால் அது எத்தனை பெரிய சாதனை என்பது சொல்லாமலே விளங்கும்.

வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி, வலிமை நான்கு மொழிகளில் வெளியாகிறது. அஜித் படத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எதிர்பார்ப்பும் மிக அதிக அளவில் உள்ளது. ரசிகர்கள் முன் பதிவிலேயே முதல் மூன்று நாட்களுக்கான காட்சிகளை ஹவுஸ்புல் ஆகியுள்ளனர். அரபு நாடுகளிலும் படம் பிப்ரவரி 24 வெளியாகிறது.

வலிமை படத்தைப் பார்த்த பெற்றோர்... மனம் நெகிழ்ந்த அஜித்!

சவூதியில் 24 ஆம் தேதி அதிகாலை 1்30 மணிக்கு அஜித் ரசிகர்களுக்கு  சிறப்புக் காட்சி திரையிட ஏற்பாடாகியுள்ளது. தமிழ் நடிகர் ஒருவரின் படம் ரசிகர் மன்ற காட்சியாக அதுவும் நள்ளிரவில் திரையிடப்படுவது சவுதி அரேபியா வரலாற்றில் இதுவே முதல் முறை என்கிறார்கள்.

ஆமாம் நான் காதலிக்கிறேன்... மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

வலிமையில் கதை, சென்டிமென்ட் ஆகியவற்றைவிட ஆக்ஷன் காட்சிகளுக்கே அதிகம் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.  ஆக்ஷனுக்கு மொழி ஒரு தடையில்லை. அந்த வகையில் எல்லா மொழி ரசிகர்களையும் இந்தப் படம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Ajith, Valimai

அடுத்த செய்தி