Home /News /entertainment /

விஜய்யின் சர்கார் படத்தின் வசூலை முறியடித்த அஜித்தின் வலிமை!

விஜய்யின் சர்கார் படத்தின் வசூலை முறியடித்த அஜித்தின் வலிமை!

விஜய் - அஜித்

விஜய் - அஜித்

2 ஆண்டுகளுக்கும் மேல் காத்துக் கிடந்த அஜித் ரசிகர்களுக்கு வலிமை திரைப்படம் கொண்டாட்டத்தைக் கொடுத்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    'நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்தார். அவரின் 60-வது படமாக உருவாகிய இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    வலிமை படத்தை புகழ்ந்த அருண் விஜய்... வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

    ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியது. 2 ஆண்டுகளுக்கும் மேல் காத்துக் கிடந்த அஜித் ரசிகர்களுக்கு வலிமை திரைப்படம் கொண்டாட்டத்தைக் கொடுத்தது.

    Valimai: அஜித்தின் வலிமை கடந்து வந்த பாதை!

    இந்நிலையில் வலிமை திரைப்படம் தமிழகத்தில் முதல் நாளில் ரூ. 33.5 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படம் ரூ. 32 கோடி வசூல் செய்து தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாக முதலிடத்தில் இருந்தது. தற்போது அந்த சாதனையை அஜித்தின் வலிமை திரைப்படம் முறியடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vijay, Ajith, Thalapathy

    அடுத்த செய்தி