Home /News /entertainment /

அஜித்தின் 'வலிமை' ஏரியா வாரியாக விற்பனை விவரம்!

அஜித்தின் 'வலிமை' ஏரியா வாரியாக விற்பனை விவரம்!

வலிமை

வலிமை

2022 ஜனவரியில் வெளியாகும் படத்துக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே அனைத்து ஏரியாக்களும் விற்றுத் தீர்ந்திருப்பது முக்கியமானது.

வலிமை படத்தின் தமிழ்நாட்டு திரையரங்கு விற்பனை கனஜோராக நடந்து வருகிறது. மொத்தம் உள்ள ஒன்பது ஏரியாக்களில் 8 ஏரியாக்களின் விற்பனை முடிந்துள்ளது.

ரஜினி, விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வியாபாரத்தை தொடங்கியதுமே விற்றுத்தீரும். வலிமை படத்தை இயக்கியிருப்பது சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களின் இயக்குனர் ஹெச்.வினோத் என்பதால் படத்துக்கு வழக்கத்தைவிட அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. வலிமை படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 9 ஏரியாக்களில் 8 ஏரியாக்களின் விற்பனை முடிந்துள்ளது. அதனை இங்கே குறிப்பிடுகிறோம்.

செங்கல்பட்டு - ஸ்கைமேன் புரொடக்ஷன்ஸ்

நார்த் மற்றும் சவுத் ஆற்காடு - ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட்

கோயம்புத்தூர் - எஸ்எஸ்ஐ புரொடக்ஷன்

மதுரை - கோபுரம் பிலிம்ஸ்

சேலம் - ஸ்ரீ குமரன் பிலிம்ஸ்

திருநெல்வேலி, கன்னியாகுமரி - எம்கேஆர்பி புரொடக்ஷன்

சென்னை சிட்டி - ரோமியோ பிக்சர்ஸ்

இதில் சென்னை சிட்டி மற்றும் திருச்சி ஏரியாக்களை வாங்க கடும் போட்டி நிலவியதாக கூறப்படுகிறது. இறுதியில் சென்னை ஏரியாவில் வலிமை படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வாங்கியுள்ளார். திருச்சி ஏரியாவுக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்று அல்லது நாளைக்குள் முடிவு தெரியவரலாம்.

மேலும் பார்க்க - பா.ரஞ்சித்துடன் இணையும் விக்ரம்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2022 ஜனவரியில் வெளியாகும் படத்துக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே அனைத்து ஏரியாக்களும் விற்றுத் தீர்ந்திருப்பது முக்கியமானது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Ajith

அடுத்த செய்தி