கொரோனாவை முந்திய அஜித், விஜய் - ரசிகர்கள் மகிழ்ச்சி!

அஜித் - விஜய்

ஹேஷ்டேக் (hashtag) என்பது சமூக வலைத்தளங்களில் இடப்படும் பதிவுகளில் முக்கிய வார்த்தைகளை அடையாளமிடுவதற்கு பயன்படுத்தப்படும் குறியீடு.

 • Share this:
  ஹேஷ்டேக் டேவை முன்னிட்டு 2021 முதல் பாதியில் இந்தியாவில் அதிகம் ட்ரெண்டான ஹேஷ் டேக்குகளை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் அஜித்தின் வலிமை, விஜய்யின் மாஸ்டர் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.

  ஹேஷ்டேக் (hashtag) என்பது சமூக வலைத்தளங்களில் இடப்படும் பதிவுகளில் முக்கிய வார்த்தைகளை அடையாளமிடுவதற்கு பயன்படுத்தப்படும் குறியீடு. முக்கியமாக இது ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்படும். அந்த வகையில் ஹேஷ்டேக் தினத்தை முன்னிட்டு 2021-ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட 10 ஹேஷ்டேக்குகளை வெளியிட்டுள்ளது ட்விட்டர் இந்தியா நிறுவனம்.  அதில் அஜித்தில் வலிமை முதலிடத்தையும், விஜய்யின் மாஸ்டர் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. 'நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். நீண்ட நாட்களாக வலிமை அப்டேட் கேட்டு சமூக வலைதளங்களில், அந்தப் படத்தை ட்ரெண்ட் செய்து வந்தனர் ரசிகர்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. இதில் கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்திருந்தார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், கெளரி கிஷன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அனிருத்தின் இசையில் மாஸ்டர் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வசூலை குவித்தது. கொரோனா சூழலில் முடங்கிக் கிடந்த திரையரங்குகளுக்கு புத்துயிர் கொடுத்தது.

  தற்போது இவ்விரு படங்கள் இந்திய அளவில் ட்ரெண்டான ஹேஷ்டேக்குகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: