Home /News /entertainment /

மிரளவைக்கும் பைக் சண்டை காட்சிகளுடன் வலிமை டிரைலர் வெளியானது

மிரளவைக்கும் பைக் சண்டை காட்சிகளுடன் வலிமை டிரைலர் வெளியானது

Youtube Video

Valimai Trailer | ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த வலிமை படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியானது.

    Valimai Trailer: 'நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. முன்னதாக ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. வலிமை படத்தின் அம்மா சென்டிமென்ட் பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.



    இதனிடையே ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த வலிமை படத்தின் டிரைலர் இன்று வெளியானது. 3 நிமிடங்கள் வரை இருக்கும் இந்த டிரைலரில் பைக் சண்டை காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. அஜித்தின் பெயர் அர்ஜூன் என்பதும் போலீஸ் அதிகாரியாக இருக்கும் அவர் சவாலான ஒரு வழக்கை கொண்டு அதனால் ஏற்படும் பல திருப்பங்களை இந்த டிரைலரில் காண்பிக்கப்பட்டுள்ளது.

    அஜித் படங்களுக்கே உண்டான மாஸ் சண்டை காட்சிகள், த்ரில், பைக் சாகசம் என ரசிகர்களுக்கு இந்த படம் பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Actor Ajith, Valimai

    அடுத்த செய்தி