Ajith: ஆட்டோவில் சென்ற அஜித் - வைரலாகும் வீடியோ!

Ajith: ஆட்டோவில் சென்ற அஜித் - வைரலாகும் வீடியோ!

அஜித்

பயிற்சியின்போது எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படங்கள் வைரலாகின.

  • Share this:
நடிகர் அஜித் ஆட்டோவில் சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடைசியாக ’நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்த அஜித், அடுத்ததாக இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கும் தனது 60-வது திரைப்படமான வலிமையில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இன்னும் ஒரு சண்டைக் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அதுவும் விரைவில் வெளிநாட்டில் படமாக்கப்பட இருக்கிறது. இதற்கிடையே டைட்டான கால அட்டவணைக்கு மத்தியில் துப்பாக்கி சுடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார் அஜித்.



சமீபத்தில் அஜித் துப்பாக்கி சுடும் மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றார். அந்த பயிற்சியின்போது எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படங்கள் வைரலாகின.

இப்போது அவரின் அன்சீன் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னணி நடிகராக இருந்தாலும் மிகவும் எளிமையான மனிதராகக் கருதப்படும் அஜித், ஆட்டோவில் பயணிக்கும் வீடியோ தான் அது. அந்த ஆட்டோவை பின்தொடர்ந்த ஒரு ரசிகர் இந்த வீடியோவை எடுத்ததாக தெரிகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: