ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Ajith: சினிமாவுக்கு குட் பை சொல்லும் அஜித்?

Ajith: சினிமாவுக்கு குட் பை சொல்லும் அஜித்?

அஜித்

அஜித்

'துணிவு' படத்திற்குப் பிறகு அஜித்தின் அடுத்த படத்திற்கு 'ஏகே 62' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நடிகர் அஜித் நடிப்புக்கு இடைவெளி கொடுப்பதாக வெளியாகியுள்ள செய்திகளால் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள் ரசிகர்கள். 

    கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 'துணிவு' படத்திற்கான தனது போர்ஷன்களை முடித்துவிட்டு தற்போது தாய்லாந்தில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அக்டோபர் 19-ம் தேதி வீடு திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே இயக்குனர் ஹெச்.வினோத் தற்போது, சென்னை மவுண்ட் ரோட்டில் மற்ற நடிகர்களை வைத்து பேட்ச் ஒர்க் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    'துணிவு' படத்திற்குப் பிறகு அஜித்தின் அடுத்த படத்திற்கு 'ஏகே 62' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைக்க, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அஜித்தின் 63வது படத்திற்கு கால்ஷீட் வாங்க முன்னணி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.

    இந்த நிலையில் 'ஏகே 62' படத்திற்கு பிறகு ஒன்றரை வருடம் இடைவெளி எடுக்க அஜித் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரும் மற்ற இரண்டு பைக்கர்களும் இணைந்து 7 கண்டங்கள் மற்றும் 60 நாடுகளை உள்ளடக்கிய பைக் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் கிட்டத்தட்ட 18 மாதங்கள் அஜித் பைக்கில் வலம் வருவார் எனக் கூறப்படுகிறது.

    200 கோடியை தொட்ட விஜய்யின் முதல் படம்... மெர்சல் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆக மொத்தம் இரண்டரை வருடங்கள் அஜித் படம் வெளியாகாது என்பதால் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள். அதே நேரத்தில் உச்சத்தில் இருந்தாலும், தனது ஆர்வத்தைப் பின்பற்றி, அதற்கு நேரம் ஒதுக்கும் அஜித்தை சில ரசிகர்கள் கொண்டாடவும் செய்கின்றனர். இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

    Published by:Shalini C
    First published:

    Tags: Ajith