ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் அஜித்?

துணிவு புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் அஜித்?

துணிவு

துணிவு

துணிவு திரைப்படத்தின் Pre Release நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் அஜித்திடம் பேச்சு வார்த்தை. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

துணிவு திரைப்படத்தின் Pre Release Event நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் அஜித் குமாரிடம் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. 

எச்.வினோத் இயக்கம் துணிவு திரைப்படத்தில் நடிகர் அஜித் நடித்துள்ளார். இந்த படத்தை போனி கபூர்  தயாரித்திருக்கிறார்.  துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.

அதேசமயம் படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளுக்கான பேச்சுவார்த்தைகளும் தொடங்கியுள்ளனர். அதில் துணிவு திரைப்படத்தின் Pre Release Event நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அஜித்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். அவர் கலந்து கொள்ளும் பட்சத்தில் அந்த நிகழ்ச்சியை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். ஆனால் நடிகர் அஜித்குமார் அது குறித்து இன்னும் இறுதியான முடிவை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இருந்தாலும் அவரிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

உங்களுக்கு தலை வணங்குகிறேன்... மோடிக்கு நன்றிக்கு சொன்ன விஷால்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடிகர் அஜித் கடந்த 10 ஆண்டுகளாக எந்த பட புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் உள்ளார். இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் Pre Release Event நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டால் அது படத்திற்கு பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by:Shalini C
First published:

Tags: Ajith