Home /News /entertainment /

AK61 படத்திற்காக இவ்வளவு உடல் எடையைக் குறைக்கிறாரா அஜித்?

AK61 படத்திற்காக இவ்வளவு உடல் எடையைக் குறைக்கிறாரா அஜித்?

அஜித்

அஜித்

இப்படத்திற்காக அவர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

    அஜித் தனது அடுத்தப் படத்திற்காக 25 கிலோ உடல் எடையைக் குறைக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நடிகர் அஜித் குமாரின் 'வலிமை' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி சமூக வலைதளங்களில் கலவையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இருந்தாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வலுவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம், வியக்க வைக்கும் பைக் ரேஸ் காட்சிகளைக் கொண்டிருக்கிறது.

    அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் 'ஏகே61' என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என்பது ஏற்கனவே அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்காக அவர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதில் சால்ட் அண்ட் பெப்பர் லுக் ஏற்கனவே இணையத்தில் வைரலாகியது.

    பிரிவுக்குப் பிறகு நேருக்கு நேர் சந்தித்த தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... என்ன நடந்தது?

    Ajith to lose weight upto 25kg for his AK61 with H Vinoth, AK61, Boney Kapoor AK61, ajith next movie, ak61 movie, ak61 movie update, ajith next movie, Thala Ajith daughter, thala ajith, thala ajith valimai, valimai hd stills, thala ajith movies, valimai images, valimai ajith, அஜித், அஜித் படங்கள், வலிமை அஜித், அஜித் வலிமை, வலிமை படங்கள், ajith latest images, ajith young look, anoushka ajith age, anoushka ajith instagram, anoushka ajith birthday date, anoushka, ajith recent photos, anoushka ajith movie, anoushka kumar age, anoushka ajith school name, anoushka ajith childhood photos, அனோஷ்கா அஜித், அஜித் மகள்

    விஜய் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் அனுஷ்கா?

    மற்றொரு கதாபாத்திரத்திற்காக 25 கிலோ வரை உடல் எடையைக் குறைக்க அஜித் கடுமையான பயிற்சி எடுத்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், அரை டஜன் பயிற்சியாளர்கள், அஜித்தின் உடல் எடையைக் குறைக்க தீவிர முயற்சியில் இறங்கியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Ajith

    அடுத்த செய்தி