ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு நாள் ஸ்பெஷல்... அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்பச் செய்தி!

துணிவு நாள் ஸ்பெஷல்... அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்பச் செய்தி!

துணிவு

துணிவு

ஒரு பெரிய பட்ஜெட் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படமாக உருவாகியுள்ள இதில், நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்குமார் நெகட்டிவ் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

துபாயின் புர்ஜ் கலிஃபா மற்றும் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் அஜித்தின் துணிவு ட்ரைலர் திரையிடப்படும் எனக் கூறப்படுகிறது.

துபாயில் உள்ள பாம் தீவுகளில் ஸ்கை-டைவிங் விளம்பரங்களை தொடங்கிய நிலையில், அஜித் குமாரின் துணிவு படத்திற்கான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. இந்தப் படத்தின் வெளிநாட்டு விநியோகஸ்தரான லைகா புரொடக்ஷன்ஸ், 2022 ஆம் ஆண்டின் கடைசி நாள் (டிசம்பர் 31) சூப்பர் அப்டேட்டுடன், துணிவு நாளாக இருக்கும் என்று அறிவித்தது.

சமீபத்திய ஆதாரங்களின்படி, துபாயின் புர்ஜ் கலிஃபா மற்றும் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பரங்களை வைக்க துணிவு படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், படத்தின் ட்ரைலர் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். அதோடு துணிவு டிரெய்லரை டிசம்பர் 31-ம் தேதி தயாரிப்பாளர்கள் வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது. இது புர்ஜ் கலிஃபா மற்றும் டைம்ஸ் சதுக்கத்திலும் திரையிடப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம்.

உலகளவில் 7000 கோடி வசூலை குவித்த அவதார்: தி வே ஆஃப் வாட்டர்!

துணிவு படத்தை பேவியூ ப்ராஜெக்ட்ஸ் & ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். ஒரு பெரிய பட்ஜெட் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படமாக உருவாகியுள்ள இதில், நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்குமார் நெகட்டிவ் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ள இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் 2023 பொங்கலுக்கு விஜய்யின் 'வாரிசு' படத்துடன் மோதவுள்ளது. தணிக்கைப பணிக்குப் பிறகு துணிவு படத்தின் இறுதி வெளியீட்டுத் தேதி தெரிய வரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith