ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பீஸ்ட் டிரைலர் சாதனையை முறியடிக்க தவறிய துணிவு

பீஸ்ட் டிரைலர் சாதனையை முறியடிக்க தவறிய துணிவு

அஜித் - விஜய்

அஜித் - விஜய்

'துணிவு' படத்தின் ட்ரைலர் வெளியான முதல் 24 மணி நேரத்தில் 1.1 மில்லியன் லைக்குகளுடன் 25 மில்லியன் பார்வைகளைப் பெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பீஸ்ட் பட ட்ரைலர் சாதனையை முறியடிக்க தவறிவிட்டது சமீபத்தில் வெளியான துணிவு ட்ரைலர்.

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் படத்தின் டிரைலர் புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்டது. அஜித் அதில் படு ஸ்டைலிஷாக இடம்பெற்றிருந்தார்.  அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி, பல நட்சத்திரங்களும் 'துணிவு' டிரெய்லரைப் பாராட்டி வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் இப்படம் குறித்த பதிவுகள் நிரம்பி வழிகின்றன. ஆனால், 'துணிவு' படத்தின் ட்ரைலர் வெளியான முதல் 24 மணி நேரத்தில் 1.1 மில்லியன் லைக்குகளுடன் 25 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. அதே நேரத்தில் 24 மணி நேரத்தில் 2.2 மில்லியன் லைக்குகள் மற்றும் 30 மில்லியன் பார்வைகளைப் பெற்ற, விஜய்யின் 'பீஸ்ட்' டிரெய்லர் சாதனையை முறியடிக்க இப்படம் தவறிவிட்டது.

'துணிவு' வங்கி கொள்ளையை மையப்படுத்திய படமாக இருக்கும் எனத் தெரிகிறது. இதில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கன், ஜி.எம்.சுந்தர் மற்றும் அஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 'துணிவு' படத்தின் ட்ரெய்லர் விஜய்யின் பீஸ்ட் படத்தை நினைவுப்படுத்துவதால், இந்த இரு படங்களையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் அதிக பதிவுகளை காண முடிகிறது.

துணிவு ட்ரெய்லருக்கு கார் ஊர்வலம்.. வெறித்தனமாக கொண்டாடிய மலேசியா ரசிகர்கள்!

Ajith's Thunivu trailer fails to beat thalapathy Vijay's Beast trailer in 24 hrs, Ajith Thunivu trailer, thunivu trailer record, beast trailer record, thalapathy vijay beast, beast trailer, பீஸ்ட் ட்ரைலர், துணிவு ட்ரைலர், thunivu release, thunivu varisu, Ajith ak61 titled as thunivu no guts no glory, Ajith AK61 titled as Thunivu, Thunivu, Thunivu first look poster, துணிவு, துணிவு ஃபர்ஸ்ட்லுக், Ajith ak61 title and first look, AK61, Boney Kapoor, thunivu release date, ajith next movie, Thala Ajith daughter, thala ajith, thala ajith valimai, valimai hd stills, thala ajith movies, valimai images, valimai ajith, அஜித், அஜித் படங்கள், ajith latest images, ajith young look,
பீஸ்ட் - துணிவு ட்ரைலர்

'துணிவு' படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் 'வாரிசு' படத்துடன் மோதுகிறது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு விஜய் மற்றும் அஜித் படங்கள் ஒரே சமயத்தில் வெளியாவதால், இருவரின் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். இதற்கிடையே 'வாரிசு' ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith, Actor Thalapathy Vijay