ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அந்தமானில் அதிக திரைகளில் திரையிடப்படும் அஜித்தின் துணிவு

அந்தமானில் அதிக திரைகளில் திரையிடப்படும் அஜித்தின் துணிவு

துணிவு படத்தில் அஜித்

துணிவு படத்தில் அஜித்

தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக அந்தமானில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருப்பதால் தமிழ் படங்களுக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அந்தமானில் அதிக திரைகளில் திரையிடப்படுகிறது அஜித்தின் துணிவு திரைப்படம்.

விஜய்யும் அஜித்தும் கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் மோதுகின்றனர். இவர்களின் வாரிசு மற்றும் துணிவு ஆகியப் படங்கள் நாளை திரையரங்குகளில் வெளியாகின்றன. முதலில் அஜித் படம் நள்ளிரவு 1 மணிக்கு முதல் காட்சியும், விஜய் படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கும் திரையிட திட்டமிடப்பட்டன. ஆனால் தற்போது 16-ம் தேதி வரை வாரிசு - துணிவு ஆகியப் படங்களின் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ் திரைப்படங்கள் இங்கு வெளியாவதுடன், வெளிநாடுகளிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் கூட வெளியாகின்றன. தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக அந்தமானில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருப்பதால் தமிழ் படங்களுக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

தீவில் உள்ள திரையரங்கில் மூன்று திரைகள் உள்ளதாகவும், 'துணிவு' மற்றும் 'வாரிசு' ஆகிய படங்களுக்கு ஒரு திரையை பிரித்துவிட்டு, மூன்றாவது திரையரங்கில் திரையிடப்படும் படத்தைத் தீர்மானிக்க, தியேட்டர் சங்கம் டாஸ் போட்டு தீர்மானித்துள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

டாஸில் அஜித்தின் ‘துணிவு’ வென்றதையடுத்து, இப்போது அந்தமானில் உள்ள மூன்றாவது திரையில் அப்படம் திரையிடப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith, Thunivu