ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Thunivu: காசே தான் கடவுளடா... அஜித்தின் துணிவு படத்தின் செகண்ட் சிங்கிள்!

Thunivu: காசே தான் கடவுளடா... அஜித்தின் துணிவு படத்தின் செகண்ட் சிங்கிள்!

துணிவு

துணிவு

துணிவு படத்தின் இரண்டாவது சிங்கிள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

துணிவு படத்தின் செகண்ட் பாடலான ’காசேதான் கடவுளடா’ என்ற பாடல் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். ஜிப்ரன் இசையமைக்கிறார். இப்படத்திற்காக அஜித் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணிவு படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே படத்தின் முதல் சிங்கிளான ’சில்லா சில்லா’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஜிப்ரன் இசையமைத்த இந்தப் பாடலை அனிருத் பாடியிருந்தார்.

10 வருட திருமண வாழ்க்கை... முதல் குழந்தையை வரவேற்க தயாராகும் ராம் சரண் - உபாசனா தம்பதி!

இந்நிலையில் தற்போது துணிவு படத்தின் இரண்டாவது சிங்கிள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் விதத்தில், காசே தான் கடவுளடா என ஹேஷ்டேக்கில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பாடல் எப்போது வெளியாகும் என காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith