முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Thunivu: மாஸ்-கிளாஸ் கலந்த அஜித்தின் துணிவு செகண்ட் லுக் போஸ்டர்!

Thunivu: மாஸ்-கிளாஸ் கலந்த அஜித்தின் துணிவு செகண்ட் லுக் போஸ்டர்!

துணிவு

துணிவு

துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியாகியது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் அஜித்தின் துணிவு செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி புதிய படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். ஜிப்ரன் இசையமைக்கிறார். இப்படத்திற்காக அஜித் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ஏகே 61' படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

ஏகே61 படத்தின் படப்பிடிப்பு துவங்கி பல மாதங்கள் ஆன நிலையில், அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடாதது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை தந்தது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை டேக் செய்து ஏகே61 படத்தின் டைட்டிலை வெளியிடும்படி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் அஜித் ரசிகர்கள்.

நடிகை கெளதமியின் மகள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

இதற்கிடையே அந்தப் படத்துக்கு துணிவு எனப் பெயரிடப்பட்டுள்ளதாக, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று மாலை வெளியாகின. இதை சிறப்பாகக் கொண்டாடினர் ரசிகர்கள். இந்நிலையில் துணிவு படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Ajith