முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பொங்கல் ரிலீஸ்.. தியேட்டர் லிஸ்டுடன் போஸ்டர் அடித்த துணிவு ரசிகர்கள்! மதுரை மாஸ்!

பொங்கல் ரிலீஸ்.. தியேட்டர் லிஸ்டுடன் போஸ்டர் அடித்த துணிவு ரசிகர்கள்! மதுரை மாஸ்!

துணிவு

துணிவு

மதுரையில் எங்கெல்லாம் துணிவு படம் ஓடவுள்ளது என்ற லிஸ்டையும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்

  • Last Updated :
  • Tamil Nadu, India

அடுத்தடுத்து பல நடிகர்களின் படங்கள் ரிலீஸாகின்றன். குறைந்தபட்சம் படத்தின் அப்டேட்டாவது அடிக்கடி வெளியாகிறது. இதையெல்லாம் பார்த்து பார்த்து துணிவுக்காக வேற லெவல் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து எச்.வினோத் இயக்கம் துணிவு திரைப்படத்தில் அஜித் குமார் நடித்து வருகிறார்.

இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. 55 நாட்களுக்கு மேல் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கி முடித்தனர். அதன் பின்பு படத்தொகுப்பு வேலைகள் நடைபெற்றன. அந்த சமயத்தில் நடிகர் அஜித்குமார் தன்னுடைய குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றார்.

அதன்பின் சென்னை திரும்பி அவர், மீண்டும் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக கடந்த 23ஆம் தேதி நடிகர் அஜித்குமார் தாய்லாந்து புறப்பட்டார். அங்கு கடந்த 18 நாட்களாக தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது, இந்நிலையில்தான் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் தாய்லாந்து நாட்டில் நிறைவடைகிறது. பொங்கல் பண்டிகைக்கு இந்த திரைப்படத்தை வெளியிட தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டுள்ளார். அதனால் படத்தின் இறுதி கட்டப் பணிகளை விரைவில் முடிக்கவும் படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

அஜித் மற்றும் மஞ்சு வாரியர்

top videos

    இன்று ஷூட்டிங் முடிந்துவிட்டதால் நிச்சயம் போஸ்ட் ப்ரடொக்‌ஷன் வேலைகளை முடித்துவிட்டு பொங்கலுக்கு நிச்சயம் படம் வெளியாகும் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் வகையில் மதுரையில் பொங்கல் வெளியீடு என போஸ்டர்களை அடித்து ஒட்டியுள்ளனர் அஜித் ரசிகரகள். அதுமட்டுமின்றி மதுரையில் எங்கெல்லாம் துணிவு படம் ஓடவுள்ளது என்ற லிஸ்டையும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். மதுரையில் அடிக்கப்பட்ட துணிவு போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. #ThunivuPongal2023 என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது.

    First published:

    Tags: Ajith