ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

முன்னணி நிறுவனங்களுடன் கூட்டணி… பிரமாண்ட ஓபனிங்கை நோக்கி அஜித்தின் துணிவு…

முன்னணி நிறுவனங்களுடன் கூட்டணி… பிரமாண்ட ஓபனிங்கை நோக்கி அஜித்தின் துணிவு…

துணிவு பட டப்பிங்கில் அஜித்

துணிவு பட டப்பிங்கில் அஜித்

வங்கி கொள்ளையை மையமாக வைத்து க்ரைம் ஆக்சன் த்ரில்லர் ஜானரில் துணிவு திரைப்படம் வெளியாகவுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

முன்னணி விநியோகஸ்த நிறுவனங்களுடன் துணிவு படம் கூட்டணி அமைத்துள்ளதால் இந்த படத்திற்கு பிரமாண்ட ஓபனிங் கிடைக்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. தமிழகத்தில் தற்போதைய சூழலில் இந்த விநியோகஸ்த நிறுவனமே முன்னணியில் இருக்கிறது.

வெளிநாடுகளில் துணிவு படத்தை லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது. தமிழில் இன்டஸ்ட்ரி ஹிட்டான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை லைகா நிறுவனமே வெளியிட்டதால், துணிவு படத்திற்கும் அதிக திரையரங்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை வெளியாகிறது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திலிருந்து 2-வது சிங்கிள்!

அமெரிக்காவில் துணிவு படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை சரிகம சினிமாஸ் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் மெகா ஹிட்டான ஆர்.ஆர்.ஆர். மற்றும் கே.ஜி.எஃப். 2 ஆம் பாகத்தை இந்த நிறுவனம்தான் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் முன்னணி விநியோகஸ்த நிறுவனங்களுடன் துணிவு இணைந்திருப்பதால்  இந்த படத்திற்கு பிரமாண்ட ஓபனிங் கிடைப்பது உறுதி என்கின்றனர் சினிமா வர்த்தக நிபுணர்கள்.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக துணிவு படத்தில் அஜித், எச்.வினோத், போனி கபூர் ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளனர். இந்த படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கோக்கன், சிபி சக்கரவர்த்தி, அமீர், பாவ்னி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

ரஜினியின் பாபா திரைப்படம் மீண்டும் ரிலீஸாகும் தேதியை அறிவித்த இயக்குனர்… எதிர்பார்ப்பில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்

ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வங்கி கொள்ளையை மையமாக வைத்து க்ரைம் ஆக்சன் த்ரில்லர் ஜானரில் துணிவு திரைப்படம் வெளியாகவுள்ளது. தற்போது படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ஓரிரு நாட்களில் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித், விஜய் படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாகுவதால் இந்த பொங்கல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Actor Ajith