ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெறித்தனம் காட்டிய அஜித் ரசிகர்கள் - ஒரு மணி நேரத்தில் துணிவு நிகழ்த்திய சாதனை!

வெறித்தனம் காட்டிய அஜித் ரசிகர்கள் - ஒரு மணி நேரத்தில் துணிவு நிகழ்த்திய சாதனை!

'துணிவு' அஜித் குமார்

'துணிவு' அஜித் குமார்

பொதுவாக அஜித் பட டீசர் , டிரெய்லர்கள் வெளியானால் அவை ஒரு மணி நேரத்தில் எவ்வளவு பார்வையாளர்களை பெற்றிருக்கின்றன, ஒருநாளில் எவ்வளவு பார்வையாளர்களைப் பெற்றிருக்கின்றன என்பது முக்கியமானதாக கருதப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

துணிவு படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. ஏற்கனவே வெளியான தகவலின் படி படம் வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. வாரிசு படத்துடன் துணிவு படம் வெளியாவதால் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்களும் இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அஜித் எதிர்மறை வேடத்தில் நடித்துள்ள இந்தப் படம் அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமாக இருக்கப்போகிறது.

குறிப்பாக அஜித் மிகவும் உற்சாகமாக நடித்திருக்கிறார் என்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். பொதுவாக அஜித் பட டீசர் , டிரெய்லர்கள் வெளியானால் அவை ஒரு மணி நேரத்தில் எவ்வளவு பார்வையாளர்களை பெற்றிருக்கின்றன, ஒருநாளில் எவ்வளவு பார்வையாளர்களைப் பெற்றிருக்கின்றன என்பது முக்கியமானதாக கருதப்படும். அந்த வகையில் துணிவு படம் ஒரு படத்தில் 2.6 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது. வாரிசு பட டிரெய்லர் இதனை முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித்தின் படத்தைப் பகிர்ந்து அவரது பெயர் என்ன என்று யூகித்து சொல்லுங்கள் என ரசிகர்களிடம் கேட்டுள்ளனர். இதனையடுத்து அவரது ரசிகர்கள் ஏகே-வாக இருக்கும், விநாயக் மகாதேவ் ஆக இருக்கும் என தங்களது யூகங்களை பதிவிட்டுவருகின்றனர். பட டிரெய்லரிலும் நடிகர் அஜித்தின் பெயர் வெளியிடப்படவில்லை.

மேலும் இந்தப் படத்தில் பத்திரிகையாளர் மைபா நாராயணன் கதாப்பாத்திரத்தில் பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் நடித்துள்ளார். நடிகர் பிரேம், பிரேம் என்ற தனது சொந்தப் பெயரிலேயே நடித்திருக்கிறார். மேலும் நடிகர் பக்ஸ், ராஜேஸ் என்ற வேடத்திலும், நடிகர் ஜான் கொக்கென், கிரிஷ் என்ற வேடத்திலும் ராஜதந்திரம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த வீரா, ராதா என்ற வேடத்திலும் நடிகர் ஜிஎம் சுந்தர் முத்தழகன் என்ற வேடத்திலும் தெலுங்கு நடிகர் அஜய், ராமச்சந்திரன் என்ற வேடத்திலும் நடித்துள்ளனர்.

பிரபல நடிகர் சமுத்திரக்கனி இந்தப் படத்தில் தயாளன் என்ற காவல் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார். நடிகை மஞ்சுவாரியர் கண்மணியாக நடித்திருக்கிறார். தொடர்ந்து மேலும் இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட கதாப்பாத்திரங்களைத் தொடர்ந்து பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவனி, சிபி மற்றும் கனா பட ஹீரோ தர்ஷன் போன்றவர்களும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

First published:

Tags: Actor Ajith, Thunivu