ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு படத்தின் வெளிநாட்டு உரிமையை தட்டித் தூக்கிய பெரிய நிறுவனம்

துணிவு படத்தின் வெளிநாட்டு உரிமையை தட்டித் தூக்கிய பெரிய நிறுவனம்

துணிவு

துணிவு

துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது.  இதைத் தொடர்ந்து வெளிநாட்டு உரிமையை மற்றொரு பெரிய தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தை வெளிநாடுகளில் லைகா நிறுவனம் வெளியிடுகிறது.

அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படம்m வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. ஜனவரி 12ஆம் தேதி வெளியாகியுள்ள இந்த படத்திற்கான வியாபார பணிகள் நடைபெற்று வருகின்றன. துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது.  இதைத் தொடர்ந்து வெளிநாட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அவதார் தி வே ஆஃப் வாட்டர் படத்தின் தமிழ் போஸ்டர் இதோ...

சமீபத்தில் வெளியான தங்களுடைய பொன்னியின் செல்வன் திரைப்படத்தை வெளிநாடுகளில் உள்ள  விநியோகஸ்தர்கள் மூலம் லைகா நிறுவனம் சொந்தமாக வெளியிட்டது. அதன் மூலம் அந்த நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைத்து. இந்த நிலையில் துணிவு திரைப்படத்தை டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில் வெளிநாட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளதது.

அஜித் நடிக்கும் 62 ஆவது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் அஜித்தின் 61வது படமான துணிவையும் வெளிநாடுகளில் அந்த நிறுவனமே வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கவுதம் கார்த்தியுடன் விரைவில் திருமணம்.... இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை டெலிட் செய்த மஞ்சிமா மோகன்

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் துணிவு திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை வியாபாரம் ஆகவில்லை என விஜய் ரசிகர்கள் செய்திகள் பரப்பி வந்தனர். இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

Published by:Srilekha A
First published:

Tags: Actor Ajith