ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இணையத்தில் லீக்கான அஜித்தின் துணிவு முதல் சிங்கிள் ’சில்லா சில்லா’ பாடல்

இணையத்தில் லீக்கான அஜித்தின் துணிவு முதல் சிங்கிள் ’சில்லா சில்லா’ பாடல்

அஜித்

அஜித்

'துணிவு' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் ’வாரிசு' படத்துடன் மோதுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

துணிவு படத்தின் முதல் சிங்கிளான சில்லா சில்லா இணையத்தில் கசிந்தது அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அஜித்தின் 'துணிவு' பொங்கலுக்கு வெளியாக தயாராகி வருகிறது. முன்னதாக டிசம்பர் 9-ஆம் தேதி படத்தின் முதல் சிங்கிள் 'சில்லா சில்லா' என்ற பாடல் வெளியாவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ஆனால் அதிர்ச்சியூட்டும் வகையில் அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ள இப்பாடல் ஆன்லைனில் கசிந்துள்ளது. 'சில்லா சில்லா'வின் 10 வினாடி பாடல் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலானது.

ஜிப்ரான் இசையமைத்துள்ள 'துணிவு' படத்தில் ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமே இருக்கும். மேலும் அஜித்துடன் ஜிப்ரான் முதன்முதலில் இணைந்துள்ள படமும் இதுதான். படத்தின் இறுதிக்கட்ட இசை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 'சில்லா சில்லா' ஒரு ஃபோக் பாடலாக இருக்கும், மேலும் இது அஜித்துக்காக அனிருத் ரவிச்சந்தர் பாடிய 'ஆலுமா டோலுமா' பாணியில் இருக்கும். கல்யாண் மாஸ்டர் இந்தப் பாடலுக்கான நடன அசைவுகளை அமைத்துள்ளார்.

கிராமத்து நண்பர்களுடன் சென்னையில் லூட்டி அடித்த மணிமேகலை ஹுசைன்!

இதற்கிடையில், அஜித்தின் 'துணிவு' படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 'துணிவு' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் ’வாரிசு' படத்துடன் மோதுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருபெரும் நடிகர்களும் நேருக்கு நேர் மோதுவது, ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கிளப்பியுள்ளது. ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகும் 'வாரிசு' படத்திற்கு ஒரு நாள் முன்னதாக 'துணிவு' வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Ajith