ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Thunivu: சில்லா சில்லா பாடல் வெளியீட்டில் தாமதம்... புது போஸ்டர் வெளியிட்ட படக்குழு!

Thunivu: சில்லா சில்லா பாடல் வெளியீட்டில் தாமதம்... புது போஸ்டர் வெளியிட்ட படக்குழு!

துணிவு

துணிவு

துணிவு படத்தின் முதல் சிங்கிளான ’சில்லா சில்லா’ என்ற பாடல் இன்று வெளியாகும் என சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்று மாலை 5 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட துணிவு படத்தின் முதல் சிங்கிளான சில்லா சில்லா பாடல் 6.30 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. 

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். ஜிப்ரன் இசையமைக்கிறார். இப்படத்திற்காக அஜித் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணிவு படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து துணிவு படத்தின் முதல் சிங்கிளான ’சில்லா சில்லா’ என்ற பாடல் இன்று வெளியாகும் என சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. பின்னர் 5 மணிக்கு சில நிமிடங்கள் முன்பு பாடல் 6.30 மணிக்கு வெளியாவதாக புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய படங்கள்!

ஏற்கனவே சரியாக அப்டேட் தருவதில்லை என அதிருப்தியில் இருந்த அஜித் ரசிகர்களின் பொறுமையை இது இன்னும் சோதித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith