ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Thunivu Pongal: பொங்கலுக்கு வெளியாகும் அஜித்தின் துணிவு... படத்தைக் கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!

Thunivu Pongal: பொங்கலுக்கு வெளியாகும் அஜித்தின் துணிவு... படத்தைக் கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!

துணிவு

துணிவு

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதாகவும் அதனை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயெண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். ஜிப்ரன் இசையமைக்கிறார். இப்படத்திற்காக அஜித் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணிவு படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

  நீண்ட நாள் இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த மாதம் இப்படத்திற்கு துணிவு எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை குதூகலமாகக் கொண்டாடினார்கள் அஜித் ரசிகர்கள். இதையடுத்து படம் பொங்கலுக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. அதே சமயம் விஜய்யின் வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருப்பதால், வீரம்-ஜில்லா படங்களுக்குப் பிறகு அஜித்தும் விஜய்யும் மீண்டும் நேருக்கு நேர் மோதுவதை பார்க்க எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனாலும் துணிவு படம் பொங்கலுக்கு வெளியாவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது.

  அஜித்தின் ஏகே62 படத்தில் கதாநாயகியாக த்ரிஷா?

  இந்நிலையில் தற்போது அது அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனவும், அதனை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயெண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுவதாகவும் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இது விஜய் - அஜித் ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் அதிக எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Ajith