ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அஜித் ரசிகர்களுக்காக இதோ துணிவு அப்டேட்… சூப்பர் ஸ்பீடில் டப்பிங் பணிகள்!

அஜித் ரசிகர்களுக்காக இதோ துணிவு அப்டேட்… சூப்பர் ஸ்பீடில் டப்பிங் பணிகள்!

துணிவு டப்பிங் பணியில் மஞ்சு வாரியர்

துணிவு டப்பிங் பணியில் மஞ்சு வாரியர்

1987 - இல் பஞ்சாபில் நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘துணிவு’ திரைப்படம் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அஜித் நடிப்பில் உருவாகி வரும் துணிவு படத்தின் அடுத்த அப்டேட் வெளிவந்துள்ளது. தற்போது டப்பிங் பணிகள் அதிவேகத்தில் நடந்து வருகின்றது.

  அஜித் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், ஜான் கோக்கன், சமுத்திரக்கனி, அமீர், பாவ்னி, சிபி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

  கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக துணிவு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஷூட்டிங் நிறைவு பெற்று தற்போது டப்பிங் பணிகள் தீயாய் நடந்து வருகிறது. தினமும் படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் டப்பிங்கை முடித்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். பொங்கலுக்கு படம் ரிலீசாகவுள்ள நிலையில் பரபரவென வேலைகளை செய்து வருகிறார் இயக்குநர் வினோத்.

  கமல் படத்தை இயக்கப் போகிறாரா எச்.வினோத்? கோலிவுட்டில் பரபரப்பு

  இந்நிலையில் படத்தின் ஹீரோயின் மஞ்சு வாரியர் தற்போது டப்பிங்கை முடித்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது. சோபாவில் அமர்ந்தவாறு முகத்தில் படு உற்சாகத்துடன் மஞ்சு வாரியர் வெளியிட்டிருக்கும் ஃபோட்டோ அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
   
  View this post on Instagram

   

  A post shared by Manju Warrier (@manju.warrier)  விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்துவிட்டு விளம்பர வேலைகளில் துணிவு படக்குழு இறங்கும் என தெரிகிறது.

  1987 - இல் பஞ்சாபில் நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘துணிவு’ திரைப்படம் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு தீபாவளிக்கு துணிவு படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு தொடர்ச்சியாக தள்ளிக் கொண்டே சென்றதால், துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. பொங்கலுக்கு விஜயின் வாரிசு படமும் வெளியாகவுள்ளதால் வரும் பொங்கல் சினிமா ரசிகர்களுக்கு செம ஹேப்பியாகவே இருக்குமென தெரிகிறது.

  வாடிவாசல் படத்தின் கதை குறித்து வெற்றிமாறன் வெளியிட்ட புதிய தகவல்… சூர்யா ரசிகர்கள் உற்சாகம்

  எச். வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் இணைந்து பணியாற்றிய ஜிப்ரான் துணிவு படத்திற்கு இசை அமைக்கிறார். துணிவு படத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக 2 போஸ்டர்கள் வெளிவந்துள்ளன. இதைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதியான பொங்கல் ரிலீஸ் அப்டேட்டுடன் அட்டகாசமான 3ஆவது போஸ்டர் இந்த வார இறுதிக்குள் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

  Published by:Musthak
  First published:

  Tags: Manju Warrier