ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் அஜித்தின் கேங்ஸ்டா பாடல்!

கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் அஜித்தின் கேங்ஸ்டா பாடல்!

துணிவு அஜித்

துணிவு அஜித்

ட்ரெய்லர் மற்றும் டீஸர் இரண்டையும் வெளியிட நேரம் குறைவாக இருப்பதால் நேரடியாக ட்ரைலர் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

துணிவு படத்தின் 3-வது பாடலான கேங்ஸ்டா என்ற பாடல் கிறிஸ்துமஸை முன்னிட்டு வரும் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் 'துணிவு' திரைப்படம் வரும் ஜனவரி 12, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதையடுத்து இசையமைப்பாளர் ஜிப்ரான் நேற்று காலை மூன்றாவது சிங்கிள் குறித்து ட்விட்டரில் அறிவித்தார். இந்தப் புதிய பாடலை பாடகர் ஷபீர் சுல்தான் பாடியுள்ளார். துணிவு படத்தின் முதல் இரண்டு பாடல்களான சில்லா சில்லா மற்றும் காசேதன் கடவுளடா ஆகியப் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இதையடுத்து நேற்று மாலை துணிவு படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர், கேங்ஸ்டா பாடலின் வரிகளை ட்விட்டரில் பகிர்ந்துக் கொண்டார். தமிழ் மற்றும் ஆங்கில வரிகள் கொண்ட இந்த பாடல் வெளியான பிறகு வைரலாகும் என்பது உறுதி.

பிரேக்கில் சிம்பு செய்யவிருக்கும் சிறப்பான சம்பவம்

ரசிகர்கள் 2023 புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் துணிவு படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகும் என சில செய்திகள் தெரிவிக்கின்றன. ட்ரெய்லர் மற்றும் டீஸர் இரண்டையும் வெளியிட நேரம் குறைவாக இருப்பதால் நேரடியாக ட்ரைலர் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. படத்தில் அஜீத் தவிர, மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி, மமதி சாரி, வீரா, பிரேம் குமார், மற்றும் மகாநதி ஷங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். துணிவு படம் பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் வாரிசு படத்துடன் மோதுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Ajith