• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • என் அன்புக்குரிய தல... பிரசன்னாவை நெகிழ வைத்த அஜித்!

என் அன்புக்குரிய தல... பிரசன்னாவை நெகிழ வைத்த அஜித்!

பிரசன்னா

பிரசன்னா

வலிமை கதையை கேட்டதும், வில்லன் வேடத்துக்கு பிரசன்னா அல்லது அர்ஜுன் தாஸ் பொருத்தமாக இருப்பார்கள் என அஜித் கூறியதாக வினோத் தெரிவித்திருந்தார்.

  • Share this:
    திரையுலகில் உள்ள அனைவரும் மாஸ் நடிகர்களின் குட்புக்கில் இடம்பெற வேண்டும் என்று நினைப்பதில் வியப்பில்லை. அதுவும் அஜித் போன்ற, பொதுவெளியில் அதிகம் வராதவரின் நினைவில் ஒரு நடிகர் இருக்கிறார், அவர் குறித்து பேசுகிறார் என்பது சம்பந்தப்பட்டவர்களை நெகிழச் செய்துவிடும். அதுதான் பிரசன்னா விஷயத்திலும் நடந்திருக்கிறது.

    நேர்கொண்ட பார்வையைத் தொடர்ந்து அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி வருகிறார் ஹெச்.வினோத். இதையடுத்தும் அவர்தான் அஜித் நடிக்கும் படத்தை இயக்குகிறார். வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ச்சியாக அஜித் படங்களை இயக்கிய சிவாவின் ஹாட்ரின் சாதனையை இதன் மூலம் வினோத் சமன் செய்ய உள்ளார். சமீபத்தில் அவர் அஜித் குறித்தும், வலிமை குறித்தும் அளித்த நீண்ட பேட்டியின் ஒவ்வொரு அம்சமாக எடுத்து அஜித் ரசிகர்கள் விவாதித்து வைரலாக்கி வருகின்றனர்.

    இந்த பேட்டியில், வலிமை கதையை கேட்டதும், வில்லன் வேடத்துக்கு பிரசன்னா அல்லது அர்ஜுன் தாஸ் பொருத்தமாக இருப்பார்கள் என அஜித் கூறியதாக வினோத் தெரிவித்திருந்தார். இதை படித்த பின் அஜித் ரசிகர்கள் தூங்குவார்களா? பிரசன்னாவின் சமூக வலைத்தள பக்கத்தில் போய், தல இந்த மாதிரி சொல்லியிருக்கிறாரே, நீங்க என்ன சொல்றீங்க என்று வாயை பிடிங்கியுள்ளனர். பிரசன்னா, மிஷ்கினின் அஞ்சாதே படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து பெயரை அள்ளியவர். எந்த வேடத்தையும் சின்சியராக செய்யக் கூடியவர். ஒருமுறை பிரகாஷ்ராஜ், பிரசன்னாவையும், பிருத்விராஜையும் 'நோ நான்சென்ஸ்' நடிகர்கள் என்றார்.

    அஜித் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரசன்னா, "என் அன்புக்குரிய தல என் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்பதில் பெருமகிழ்ச்சி. வலிமை வாய்ப்பு கைநழுவியதில் ஏமாற்றம்தான். என்றாலும் பெரிய விஷயங்கள் என்னைச் சேரும் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார். அடுத்தப் படத்தில் நல்ல வேடம் இருந்தால் மறக்காமல் அழையுங்கள் என்பதன் சுருக்கமே பிரசன்னா மேலே கூறியிருப்பது. அடுத்துமுறை வினோத் பிரசன்னாவுக்கு வாய்ப்பளிப்பார் என நம்புவோம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: