ரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித் - வீடியோ

அஜித் செல்லுமிடமெல்லாம் அவருக்கு ரசிகர்கள் ஏராளம். அவரது சின்ன நகர்வைக்கூட அவரது ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.

news18
Updated: February 13, 2019, 6:36 PM IST
ரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித் - வீடியோ
அஜித் குமார்
news18
Updated: February 13, 2019, 6:36 PM IST
ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதற்காக நடிகர் அஜித் சாலையில் அமர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அஜித் செல்லுமிடமெல்லாம் அவருக்கு ரசிகர்கள் ஏராளம். அவரது சின்ன நகர்வைக்கூட அவரது ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கிக் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் ரசிகர்களை வெளியில் சந்திக்கும் போது அவர்களுடன் முகம் சுழிக்காமல் புகைப்படம் எடுத்துக் கொள்வதையும் அஜித் வழக்கமாக கொண்டுள்ளார்.

விஸ்வாசம் படத்தை அடுத்து வினோத் இயக்கும் பிங்க் பட ரீமேக்கில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி கார் ரேஸ், பைக்ரேஸ், புகைப்படம் எடுப்பது, ஆளில்லா விமானங்கள் தயாரிப்பது ஆகியவற்றில் ஆர்வம் காட்டி வரும் நடிகர் அஜித் தற்போது துப்பாக்கி சுடுதலிலும் பயிற்சி எடுத்து வருகிறார். இது அவரது அடுத்த படத்துக்கான பயிற்சியா அல்லது அவரது தனிப்பட்ட பயிற்சியா என்பதற்கான விடை இன்னும் வெளிவரவில்லை.இந்தநிலையில் நடிகர் அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் அவரது ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். பயிற்சி முடித்து வெளியே வரும் வழியில் அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக உள்ள நிலையில், அவர்களுடன் தரையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் அஜித். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.ஹாட்ரிக் வெற்றியை கொடுக்க காத்திருக்கும் சூர்யா-கௌதம் மேனன் கூட்டணி - வீடியோ

First published: February 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...