அஜித்தின் வலிமை திரைப்படம் முதல் நாளில் 35 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விடுமுறை அல்லாத நாளில் வெளியாகி அதிக வசூலை குவித்த திரைப்படம் என்னும் சாதனையையும் வலிமை படைத்துள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வலிமை திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வந்தது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 1000 திரைகளில் வெளிவந்துள்ள இப்படம் அஜித்தின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்று அசத்தியுள்ளது.
இந்திய அளவில் முதல் நாளில் 35 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கும் வலிமை திரைப்படம் தமிழகத்தில் 28 கோடி ருபாய் வரை வசூல் செய்துள்ளதன் மூலம் விஜயின் சர்க்கார் படத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் எனும் சிறப்பைப் பெற்றுள்ளது. மேலும் விடுமுறை இல்லாத நாளில் வெளிவந்து அதிக வசூல் செய்த படம் என்னும் புதிய சாதனையையும் வலிமை திரைப்படம் நிகழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: பார்வையிலேயே மயக்கும் ஜான்வி கபூர் - போட்டோஸ்
முதல் காட்சியில் இருந்தே படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் அவை தற்போது வரை வசூலில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றே சொல்லப்படுகிறது. மேலும் வார இறுதி நாட்களில் கூடுதல் சிறப்பு காட்சி திரையிடப்பட வாய்ப்பிருப்பதால் நான்கே நாட்களில் இப்படம் 100 கோடி கிளப்பில் இணையும் எனவும் கணிக்கப்படுகிறது. அதேபோல் படத்தின் நீளத்தை படக்குழு 14 நிமிடங்கள் குறைத்திருப்பதால் அதுவும் வசூலில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.