ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு லேட்டஸ்ட் அப்டேட்! அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! வசூல் வேட்டைக்கு தயாராகும் போனி கபூர்!

துணிவு லேட்டஸ்ட் அப்டேட்! அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! வசூல் வேட்டைக்கு தயாராகும் போனி கபூர்!

அஜித்

அஜித்

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து எச்.வினோத் இயக்கம் துணிவு திரைப்படத்தில் அஜித் குமார் நடித்து வருகிறார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அஜித் நடிக்கும் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து எச்.வினோத் இயக்கம் துணிவு திரைப்படத்தில் அஜித் குமார் நடித்து வருகிறார்.

இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. 55 நாட்களுக்கு மேல் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கி முடித்தனர். அதன் பின்பு படத்தொகுப்பு வேலைகள் நடைபெற்றன. அந்த சமயத்தில் நடிகர் அஜித்குமார் தன்னுடைய குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றார்.

அதன் பின் சென்னை திரும்பி அவர், மீண்டும் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக கடந்த 23ஆம் தேதி நடிகர் அஜித்குமார் தாய்லாந்து புறப்பட்டார்.  அங்கு கடந்த 18 நாட்களாக தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

Also read... திரைப்படமாகும் கிரிக்கெட் வீரர் நடராஜனின் கதை!? சேலத்து பையனாகும் சிவகார்த்திகேயன்.. பரவும் தகவல்!

இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் தாய்லாந்து நாட்டில் நிறைவடைகிறது. பொங்கல் பண்டிகைக்கு இந்த திரைப்படத்தை வெளியிட தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டுள்ளார். அதனால் படத்தின் இறுதி கட்டப் பணிகளை விரைவில் முடிக்கவும் படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Ajith