ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வட சென்னையில் நடைபெற்று வரும் ஏ.கே. 61 படப்பிடிப்பு… வைரலாகும் எச்.வினோத் ஃபோட்டோ…

வட சென்னையில் நடைபெற்று வரும் ஏ.கே. 61 படப்பிடிப்பு… வைரலாகும் எச்.வினோத் ஃபோட்டோ…

வட சென்னை ஷூட்டிங் தளத்தில் எச். வினோத்

வட சென்னை ஷூட்டிங் தளத்தில் எச். வினோத்

AK 61 Update : ஐரோப்பாவில் சுற்றுப் பயணத்தில்இருக்கும் அஜித் விரைவில் படப்பிடிப்பு தளத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அஜித் நடித்து வரும் ஏ.கே. 61 படத்தின் ஷூட்டிங் வடசென்னை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வலிமை திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றன நிலையில், மீண்டும் அதே கூட்டணி ஏகே 61 படத்தில் இணைந்துள்ளது. போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

வங்கி கொள்ளையை மையமாக வைத்து ஏ.கே.61  திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் அஜித்துடன் மஞ்சுவாரியர் படத்தில் இடம் பெற்றுள்ளார்.

தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியானது பொன்னியின் செல்வன் டீசர்… வியப்பில் ரசிகர்கள்

ஏகே 61  படத்தில், அஜித் இரண்டு கேரக்டர்களில் தோன்றுவார் என்று பரவலாக பேசப்படுகிறது. இதில், பெரிய அளவில் மேக்கப் ஏதுமின்றி ஸ்டைலிஷான லுக்கில், அஜித் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

படப்பிடிப்புத் தளத்தில் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக இருந்து அஜித் ஏ.கே.61 படத்தில் நடித்துக் கொடுத்துள்ளார்.  இந்நிலையில் தற்போது ஐரோப்பாவில் சுற்றுப் பயணத்தில்இருக்கும் அஜித் விரைவில் படப்பிடிப்பு தளத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாய்பல்லவி மீதான நோட்டீசை ரத்து செய்ய முடியாது - தெலங்கானா உயர்நீதிமன்றம் 

இதற்கிடையே அஜித் இடம்பெறாத காட்சிகளை இயக்குனர் வினோத் படமாக்கி வருகிறார். அந்த வகையில் நடிகர் சமுத்திரக்கனி ஏ.கே. 61 படத்தின் ஷூட்டிங்கில் சமீபத்தில் கலந்து கொண்டுள்ளார்

இந்நிலையில் வடசென்னையில் ஏ.கே. 61 படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான புகைப்படம்  வைரலாகி வருகிறது.

புகைப்படத்தில் எச்.வினோத், ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

First published:

Tags: Actor Ajith