• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ரஜினிகாந்துக்கு போன் செய்து பேசினாரா அஜித்? உண்மையில் நடந்தது என்ன?

ரஜினிகாந்துக்கு போன் செய்து பேசினாரா அஜித்? உண்மையில் நடந்தது என்ன?

அஜித் குமார் | ரஜினிகாந்த்

அஜித் குமார் | ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் திரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில் அவரை அஜித் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் வெளியாகின.

  • Share this:
    1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ரஜினிகாந்த் 45 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இதை சமூகவலைதளத்தில் அவரது ரசிகர்கள் கொண்டாடினர். அதற்காக உருவாக்கப்பட்ட ஸ்பெஷல் காமன் டிபியை ஏ.ஆர்.ரஹ்மான், மோகன்லால், துல்கர் சல்மான் உள்ளிட்டோர் ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியிட்டு வாழ்த்துச் சொன்னார்கள். இவர்கள் தவிர திரையுலகினரும் ரசிகர்களும் ரஜினிகாந்தை வாழ்த்து மழையில் நனைத்தனர்.

    இந்நிலையில் நடிகர் அஜித், ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அரை மணி நேரத்துக்கும் அதிகமாக பேசியதாகவும், ரஜினிகாந்தின் திரைத்துறை ரகசியங்களை இந்த உரையாடலின் போது அஜித் தெரிந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து ரஜினிகாந்த் தரப்பில் நாம் விசாரித்த போது, அப்படி இருவரும் போனில் பேசிக்கொள்ளவில்லை என்றும் இது வெறும் வதந்தி என்றும் விளக்கமளிக்கப்பட்டது.

    திரைத்துறையில் ரஜினிகாந்தை பின்பற்றும் பிரபலங்கள் பெரும்பாலானோர் இருக்கின்றனர். அதேபோல் அஜித்துக்கும் ரஜினிகாந்த் மீது அன்பும் மரியாதையும் அதிகம் உண்டு. கடந்த 2007-ம் ஆண்டு ரஜினிகாந்தின் ‘பில்லா’ ரீமேக்கில் அஜித் நடித்தார். அந்தப் படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.





    அதேபோல் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தைப் பார்த்து ரசித்த ரஜினிகாந்த் அந்தப் படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவாவை பாராட்டினார். தற்போது சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தலால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இயல்புநிலை திரும்பிய பின்னர் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: