Home /News /entertainment /

Shalini Ajith: 23 ஆண்டு பிணைப்பு... வைரலாகும் ஷாலினி அஜித் ரொமாண்டிக் படம்!

Shalini Ajith: 23 ஆண்டு பிணைப்பு... வைரலாகும் ஷாலினி அஜித் ரொமாண்டிக் படம்!

ஷாலினி அஜித்

ஷாலினி அஜித்

காதலித்து திருமணம் செய்துக் கொண்ட அஜித் - ஷாலினி ஜோடி, இதுவரை பொதுவிடங்களிலோ அல்லது புகைப்படங்களிலோ ரொமாண்டிக்காக இருந்ததில்லை.

    தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர ஜோடி அஜித் - ஷாலினி இருவரும் தங்களின் 23 ஆண்டு பிணைப்பை கொண்டாடும் வகையில் ரொமாண்டிக் படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். ‘என் வீடு என் கணவர்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான இவர், காதல் கோட்டை, அவள் வருவாளா மற்றும் காதல் மன்னன் ஆகிய படங்களில் நடித்து இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் பிறகு 1999-ம் ஆண்டில் வெளிவந்த அமர்க்களம் திரைப்படத்தில் தனது ரூட்டை மாற்றி, ஆக்‌ஷன் ஹீரோவாக களம் இறங்கினார்.

    அஜித்தின் மனைவி ஷாலினி குழந்தை நட்சத்திரமாக கிட்டத்தட்ட 50 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இதையடுத்து மலையாளத்தில் வெளியாகிய ‘அனியாத பிறவு’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியானார். இயக்குநர் ஃபாசில் இயக்கிய இந்தப் படம் ‘காதலுக்கு மரியாதை’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் கதாநாயகியாக ஷாலினியே நடித்தார். இதன் மூலம் அவர் தமிழிலும் ஹீரோயினாக அறிமுகமானார்.

    அந்தப் படம் மிகச் சிறந்த வெற்றி பெற்றது. இதையடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. இதற்கிடையே 1999-ம் ஆண்டு அமர்க்களம் படப்பிடிப்பின் போது, படத்தின் ஹீரோ அஜித்துக்கும் ஷாலினிக்கும் காதல் ஏற்பட்டது. இதனால் அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களில் நடித்து முடித்த கையோடு திருமணம் செய்துக் கொண்டு நடிப்புக்கு முழுக்குப் போட்டார் ஷாலினி.

    நடிகர் பிரசாந்த் விரைவில் இரண்டாவது திருமணம்?

    ஷாலினி அஜித் தம்பதிகளுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். அஜித் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவார், அவர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸை குவிக்கும்.

    23 Years of Togetherness - Ajith Shalini's romantic photo goes viral
    அஜித் - ஷாலினி


    இந்நிலையில் தற்போதும் அஜித் - ஷாலினியின் ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. ஆனால் அந்தப் படம் ரொம்பவே ஸ்பெஷலானது. காதலித்து திருமணம் செய்துக் கொண்ட அஜித் - ஷாலினி ஜோடி, இதுவரை பொதுவிடங்களிலோ அல்லது புகைப்படங்களிலோ ரொமாண்டிக்காக இருந்ததில்லை. ஆனால் தற்போது அவர்களின் 23 ஆண்டு பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் அழகான ரொமாண்டிக் படம் வெளியாகியுள்ளது.

    Beast Release: வெளியானது விஜய்யின் பீஸ்ட் வெளியீட்டு தேதி!

    அந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Ajith

    அடுத்த செய்தி