வலிமை ஷூட்டிங் - தனது தீர்க்கமான முடிவை போனி கபூரிடம் தெரிவித்த அஜித்

வலிமை படத்தை முடிக்காமல் வேறு எந்த படமும் நடிக்கச் செல்லமாட்டேன் என்று நடிகர் அஜித், போனி கபூரிடம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வலிமை ஷூட்டிங் - தனது தீர்க்கமான முடிவை போனி கபூரிடம் தெரிவித்த அஜித்
போனி கபூர் | அஜித்
  • Share this:
நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் - ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணி அஜித்தின் 60-வது படத்திலும் தொடர்கிறது. வலிமை என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் முற்றிலுமாக முடங்கியுள்ள நிலையில் கடந்த மே 11-ம் தேதி முதல் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து சில திரைப்படங்களின் பணிகள் நடைபெற்று வருகிறது. எனினும் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருதி வலிமை படத்தின் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டாம் என்று அஜித் தயாரிப்பாளர் போனி கபூருக்கு வலியுறுத்தியதாகவும், அதற்கு தயாரிப்பாளரும், இயக்குநரும் சம்மதம் தெரிவித்ததாகவும் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனிடையே வலிமை படத்தின் 50% படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்திருப்பதாக போனி கபூர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து திரைப்பட படப்பிடிப்புகளுக்கும் அனுமதி கேட்டு சில தயாரிப்பாளர்கள் அரசிடம் கோரிக்கை வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்தாலும் அவசரப்பட வேண்டாம் என்று போனி கபூரிடம் அஜித் கூறியுள்ளார்.


மேலும் வலிமையை முடிக்காமல் வேறு எந்த படமும் நடிக்கச் செல்லமாட்டேன் என்றும் கொரோனா பிரச்னை முடிந்து இயல்பு நிலை திரும்பிய பிறகு ஷூட்டிங் செல்லலாம் என்றும் தீர்க்கமான முடிவையும் போனி கபூரிடம் அஜித் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: காட்மேன் வெப் சீரிஸ் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நிபந்தனை ஜாமின் - நீதிமன்றம் உத்தரவு

மேலும் படிக்க: சிரஞ்சீவி சார்ஜாவின் இறுதிச் சடங்கு: உடைந்து அழுத மேக்னா ராஜ்




First published: June 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading