Home /News /entertainment /

Ajith: இந்தியாவில் அஜித்தின் பைக் ட்ரிப்... ரூட் மேப் இதுதான்!

Ajith: இந்தியாவில் அஜித்தின் பைக் ட்ரிப்... ரூட் மேப் இதுதான்!

அஜித்

அஜித்

அஜித்குமார் மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணத்தின் ரூட் மேப்பை வெளியிட்டுள்ளனர். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
அஜித்குமார் மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணத்தின் ரூட் மேப்பை வெளியிட்டுள்ளனர். 

பைக் ரேஸ் மீது அதீத காதல் கொண்டர் அஜித், அவ்வப்போது பயணம் செல்வது வழக்கம். அந்த வகையில் அவர் வாங்கிய BMW பைக்கில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் இருந்து விழுப்புரம், ஆத்தூர், சேலம், தர்மபுரி வழியாக பெங்களூர் சென்றார். அப்போது அவரின் பைக் பயணம் பெரிய அளவில் பேசப்பட்டது.

அதன் பின் தன்னுடைய படங்களில் கவனம் செலுத்தி வந்தார். அத்துடன் விபத்தில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருந்தார். இந்த நிலையில் 2021-ம் ஆண்டு உலகம் முழுவதும் பைக்கில் பயணம் மேற்கொள்வது என திட்டமிட்டார். அந்த வகையில் தமிழகத்தில் ஆரம்பித்து பல மாநிலங்களில் பயணம் செய்தார். அதன்பின் தன்னுடைய 61-வது படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அதன் 80 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன் சண்டிகரில் இருந்து தன்னுடைய பைக் பயணத்தை மீண்டும் தொடர்ந்தார்.

அவருடன் இந்தியாவின் சில முக்கிய பைக் ரைடர்களும் சென்றனர். நடிகை மஞ்சு வாரியரும் சென்றார். அவர்கள் சண்டிகரில் இருந்து குலுமணாலி, கார்கில், ஸ்ரீநகர், ஜம்மு ஆகிய இடங்கள் வழியாக பயணித்து கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய ஸ்தலங்களில் தரிசனம் செய்து பயணத்தை முடித்தார். அதன் பின் இந்தியாவின் சில இடங்களுக்கு அவர் பயணிக்க வேண்டியுள்ளது.

ரசிகையாக இருந்து பெருமைமிகு மனைவியானேன் - ரவீந்தர் குறித்து மகாலட்சுமி நெகிழ்ச்சி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



மேலும் அடுத்த ஆண்டு தன்னுடைய வெளிநாடுகளுக்கான பைக் பயணத்தை தொடங்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு காலை வெளியான நிலையில் தற்போது  இந்தியாவில் அவர் பைக்கில் பயணம் செய்த ரூட் மேப்பை வெளியிட்டுள்ளனர். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Published by:Shalini C
First published:

Tags: Ajith

அடுத்த செய்தி