Home /News /entertainment /

22 வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் இணையும் தபு!

22 வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் இணையும் தபு!

தபு - அஜித்

தபு - அஜித்

இதற்கு முன் சில தமிழ் படங்களில் நடித்த தபு, இதன் மூலம் 9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரவுள்ளார்.

    நடிகர் அஜித்துடன் 22 வருடம் கழித்து நடிகை தபு இணைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அஜித் மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் புதிய படத்தை தொடங்க உள்ளார். இதை தயாரிப்பாளர் போனி கபூரே தயாரிக்கவிருக்கிறார். அஜித் - வினோத் - போனி கபூர் இணையும் மூன்றாவது படமாக இது உருவாகவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் பூஜையுடன் தொடங்க உள்ளது. இந்நிலையில் அஜித்தின் 61-வது படத்தில் 22 ஆண்டுகளுக்கு பிறகு, தபு மீண்டும் அஜித்துடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கு முன் சில தமிழ் படங்களில் நடித்த தபு, இதன் மூலம் 9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரவுள்ளார். ராஜீவ் மேனன் இயக்கிய ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் தபுவும், அஜித்தும் ஜோடியாக நடித்தனர். ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த ஜோடி 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையவுள்ளது படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இருப்பினும் படம் குறித்த கூடுதல் விபரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Ajith, Ajith

    அடுத்த செய்தி